கிருஷ் காக்கும் கரங்கள்
எங்களை பற்றி
இந்தக் காப்பகத்தில் மாற்றுத்திறனாளிகள், ஆதரவற்றவர்கள் என 65 நபர்கள் உள்ளனர். இந்தக் காப்பகத்தை நடத்திவரும் கண்ணன் என்பவர் சிறு வயதிலேயே தனி மனிதராக இந்தக் காப்பகத்தை நடத்தி வருகிறார். கண்ணனின் அப்பா பார்வையற்றவர். அவர் விபத்தில் காலமாகிவிட்டார். அவரது லட்சியம் என் மகன் என்னைப் போன்று உள்ளவர்களுக்கு காப்பகம் நடத்த வேண்டும் என்பதே கண்ணனின் அப்பா மறைந்த பிறகு அவரது கனவை நனவாக்க அல்லும் பகலும் இரவு பகல் பாராது உழைத்து வருகிறார். இந்தப் பணியை செய்தே ஆகவேண்டும் என்ற எண்ணத்தில் இன்று 65 ஆதரவற்றோர்களுக்கு வாழ்வளித்து வருகிறார். தங்களின் பிறந்தநாள் , திருமண நாள் போன்ற விசேஷமான நாட்களில் ஒருவேளை உணவு தந்து உதவுங்கள். மற்றும் அரிசி , பருப்பு , பழைய துணி போன்ற பொருட்களையும் தந்து உதவுவோம் . நாமும் இணைவோம் நம்மால் இயன்ற உதவியை இந்தக் காப்பகத்திற்கு செய்வோம். ஒரு போன் செய்தால் போதும் நாங்கள் நேரடியாக வந்து நீங்கள் தரும் உதவியைப் ( பொருளை ) பெற்றுக் கொள்வோம்.